திருப்பலி முன்னுரை: அன்பர்களே, பொதுக்காலத்தின் முப்பத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நாம் நெருங்கிச் செல்லும்போது, நாம் அவருக்கு உகந்தவர்களாக மாற்றம் பெறுகிறோம் என்பதை இன்றையத் திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நாம் பாவிகளாய் இருந்தாலும் கடவுளைத் தேடிச் செல்லும் துணிவு பெறும்போது, அவரது இரக்கத்தை நாம் பெற்றுக் கொள்வது உறுதி. வரிதண்டிய சக்கேயு ஆண்டவரைக் காண முயற்சி எடுத்த வேளையில், அவரது வீட்டில் தங்க
Read More
திருப்பலி முன்னுரை: எளியவர்களே, பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் வேண்டுதல் செய்யும்போது நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று இன்றையத் திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நமது பெருமையை நாடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நாம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவரைப் போற்றவும், அவரது இரக்கத்தை மன்றாடவும் இயேசு நம்மை அழைக்கிறார். கடவுளிடம் பிறரைப் பற்றி குறை கூறுவதையும் அவர் கண்டிக்கிறார். ஆண்டவர்
Read More
திருப்பலி முன்னுரை: செபிப்பவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நேரிய உள்ளத்தோடு மன்றாடும்போது, அவர் நம் செபத்துக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையில் உறுதிபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் வேண்டுகோளுக்கு இவ்வுலக அதிகாரிகள் பதில் அளிப்பதைக் காட்டிலும், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்டவர் விரைந்து செயல்படுவார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். “தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும்
Read More
திருப்பலி முன்னுரை: நன்றியுள்ளவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் உதவியை நம்பிக்கையோடு கேட்கவும், பெற்ற நன்மைகளுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்தவும் இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் மட்டும் கட வுளைத் தேடுவது சரியல்ல என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்ல, இறைவனின் விருப்பத்தை முதன்மையாக நிறைவேற்ற இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
Read More
திருப்பலி முன்னுரை: நம்பிக்கைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்யும் பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, துணிவுடன் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம். கடவுள் மீதும், நம் மீதும் முழுமையாக
Read More
திருப்பலி முன்னுரை: மேன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நம்மிடம் அதிகமாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. பிறர்நலம் நாடுவதால் கிடைக்கும் பேரின்பத்தையும், தன்னலத்தால் வரும் வேதனையையும் குறித்து இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் எடுத்துரைக்கிறார். வீட்டு வாயில் அருகே இருந்த ஏழை இலாசரை கண்டுகொள்ளாத செல்வர் பாதாளத்துக்குச் செல்கிறார். தனக்கு கிடைத்த உணவுத் துண்டுகளைக் கொண்டு
Read More
திருப்பலி முன்னுரை: பொறுப்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நேரிய உள்ளத்துடன் ஆண்டவருக்கு பணிவிடை புரிய இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்து, அதன் வழியாக நற்செய்தியைப் பறைசாற்றுபவர்களாகத் திகழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கும் கிறிஸ்துவின் அரசை நிறுவும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமது தலைவர் இயேசுவின் விருப்பத்தை திருச்சபையிலும், சமூகத்திலும் நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து வாழ்வது
Read More
திருப்பலி முன்னுரை: ஆண்டவருக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அன்பையும் பரிவையும் உணர்ந்தவர்களாய் பாவத்திலிருந்து மனமாற்றம் அடைய இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் மனம் திரும்பும்போது, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயராக ஆண்டவர் மகிழ்ச்சி அடைகின்றார். தொலைத்த பணத்தைக் கண்டுபிடித்தவரைப் போன்று, விண்ணுலகத் தூதரிடையே மகிழ்ச்சி ஏற்படும் என ஆண்டவர் எடுத்துரைக்கிறார். விண்ணகத் தந்தையின் அன்பை உணராத
Read More
திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க வந்திருக்கும் உங்களை மகிழ்வோடு வரவேற்கிறோம். விடுதலை வாழ்வை வழங்குகின்ற ஆண்டவருக்கு நம்மை முழுமையாகக் கையளித்து, இயேசுவின் உண்மை சீடர்களாக வாழ இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கிறது. தம் சிலுவையைச் சுமக்காமல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணமும் புகழும் பெறுவதற்காக இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடியாது என்ற பாடத்தைக் கற்க
Read More
திருப்பலி முன்னுரை: கடவுளுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். விண்ணையும் மண்ணையும் படைத்த ஒரே கடவுளுக்கு பணிவிடை செய்து, அவர் தரும் கைம்மாறை பரிசாகப் பெற இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் ஆண்டவர் முன்னிலையில் நம்மையே தாழ்த்திக் கொள்ளும்போது, அவரால் உயர்த்தப்படுவோம் என்பதை உணர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர் என்ற எச்சரிக்கையையும் அவர் நமக்கு
Read More