ஜனவரி 12, 2020 திருப்பலி முன்னுரை: அன்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு விழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகளாக ஆகியிருக்கிறோம் என்பதை உணர இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகன் இயேசு இந்த உலக வரலாற்றில் தோன்றி, மானிடரான நாம் செய்ய வேண்டியவற்றை தமது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் நமக்கு கற்பித்தார். தூய ஆவியின் அருளைப் பெற்று
Read More
ஜனவரி 5, 2020 திருப்பலி முன்னுரை: அன்பார்ந்தவர்களே, ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கீழ்த்திசை ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். உம் திருமகன் இயேசுவின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின்
Read More
டிசம்பர் 29, 2019 திருப்பலி முன்னுரை: அன்புக்குரியவர்களே, திருக்குடும்ப விழா திருப்பலிக்கு உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். யோசேப்பும் மரியாவும் எவ்வாறு இயேசுவின் பொறுப்புள்ள பெற்றோராக வாழ்ந்தார்கள் என்பதை சிந்திக்க இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மை வளர்த்து ஆளாக்கியப் பெற்றோருக்கு மதிப்பளித்து, முதிர்ந்த வயதில் அன்போடு பணிவிடை செய்ய வேண்டிய கடமையையும் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பின்பற்றி, நமது குடும்பங்கள் கடவுளுக்கு உகந்தவையாக
Read More
டிசம்பர் 25, 2019 திருப்பலி முன்னுரை: “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” அன்பார்ந்தவர்களே, கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கிறோம். ரோமப் பேரரசை அகுஸ்து சீசர் ஆட்சி செய்த காலத்தில், கன்னி மரியாவின் மகனாக ஆண்டவர் இயேசு பிறந்த வரலாற்று நிகழ்வை இன்று நாம் கொண்டாடுகிறோம். விண்ணுலகும் மண்ணுலகும் களிகூரட்டும். தாவீதின் ஊரில் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்.
Read More
டிசம்பர் 22, 2019 திருப்பலி முன்னுரை: அன்பானவர்களே, திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். கன்னி கருவுற்று இறைமகனைப் பெற்றெடுப்பார் என்ற வாக்குறுதி விரைவில் நிறைவேறும் என்பதை இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. மரியாவை ஏற்கத் தயங்கிய யோசேப்புக்கு இறைமகனின் பிறப்பு பற்றியத் தெளிவை வானதூதர் வழங்கியதைக் காண்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்டத் தயாரிப்பில் நுழைகின்ற நாம், கடவுளுக்கு நெருக்கமானவர்களாக வாழ்ந்து அர்ப்பண உணர்வுடன் அவரது
Read More
டிசம்பர் 15, 2019 திருப்பலி முன்னுரை: அன்புக்குரியவர்களே, திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய நாளை நம் தாய் திருச்சபை மகிழ்ச்சி ஞாயிறாக சிறப்பிக்கிறது. இயேசுவே மெசியா என்பதை அறிந்து, அவரது வருகைக்காக மகிழ்ச்சியோடு தயாரிக்க இன்றையத் திருவழிபாடு வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். விண்ணரசின் மகிழ்ச்சியில் பங்கேற்க நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருமுழுக்கு யோவானைப் போன்று இறையாட்சியின்
Read More
டிசம்பர் 8, 2019 திருப்பலி முன்னுரை: அன்பார்ந்தவர்களே, திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்ற திருமுழுக்கு யோவானின் அழைப்பை இன்றையத் திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. வரப்போகும் கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்க நாம் பாவங்களை விட்டு மனந்திரும்ப வேண்டுமென யோவான் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது மனமாற்றத்தை அதற்கேற்ற செயல்களால் வெளிப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். “மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி
Read More
டிசம்பர் 1, 2019 திருப்பலி முன்னுரை: அன்பிற்கினியவர்களே, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவ ரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். நாம் வாழும் இந்த பாவச் சூழ்நிலை ஆண்டவரின் வருகைக்கான எச்சரிக்கை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. திருடனைப் போன்று, நினையாத நேரத்தில் மானிட மகனின் வருகை நிகழும் என்று
Read More
திருப்பலி முன்னுரை: இறையாட்சிக்குரியவர்களே, கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத்தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு ஆட்சியுரிமையுடன் வரும்போது நம்மை நினைவில் கொள்வதற்குத் தகுதி உள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு அனைத்துலகின் அரசர் என்பதை நல்லக் கள்வன் அறிக்கையிடுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஒரு
Read More
திருப்பலி முன்னுரை: உயிர்ப்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் முப்பதிரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாகிய நாம் அனைவரும் உயிர்த்தெழுதலின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வுலக வாழ்வில் அதிக ஆர்வம் காட்டாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இறைவன் தரும் நிலை வாழ்வை நமது சந்தேகங்களாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் இழந்துவிடாதவாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். நாம்
Read More