“நிலை வாழ்வை நம்புகின்றேன்” (I believe in the life everlasting) என திருத்தூதர்களின் ஏற்கையின் 12ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “வரவிருக்கும் மறுஉலக வாழ்வை எதிர்பார்க்கின்றேன்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. ஒருவரது இறப்பிற்குப் பிறகு உடனே தொடங்குகின்ற வாழ்வே ‘நிலை வாழ்வு’ எனப்படுகிறது. கிறிஸ்து வழங்கும் தனித் தீர்ப்பில் இருந்து முடிவற்ற நிலை வாழ்வு தொடங்குகிறது. தனித் தீர்ப்பு என்பது இறந்தவுடன் ஒவ்வொரு மனிதருக்கும் கைம்மாறு அளிக்கின்ற தீர்ப்பாகும். ஒவ்வொருவரும்
“உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்” (I believe in the resurrection of the body) என திருத்தூதர்களின் ஏற்கையின் 11ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இறந்தோரின் உயிர்ப்பை எதிர்பார்க்கின்றேன்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. இயேசு கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உண்மையாகவே உயிர்த்தெழுந்து என்றென்றும் வாழ்கிறார். அதுபோல அவரே இறுதிநாளில் ஒவ்வொருவரையும் அழியா உடலோடு உயர்த்தெழச் செய்வார். ‘உடல்’ (சதை) என்பது வலுவற்றதும் அழிவுக்குரியதுமான நிலையில் உள்ள மனிதத்தன்மையைக் குறிக்கிறது. ஆன்மா உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பது
“பாவ மன்னிப்பை நம்புகின்றேன்” (I believe in the forgiveness of sins) என திருத்தூதர்களின் ஏற்கையின் 10ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் ஏற்றுக்கொள்கின்றேன்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. பாவங்களை மன்னிக்கும் பணியையும், அதிகாரத்தையும் திருச்சபை கொண்டுள்ளது; ஏனெனில், “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (யோவான் 20:22-23) என்று கூறி,
“தூய கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவு ஒன்றிப்பையும் நம்புகின்றேன்” (I believe in the holy catholic Church, the communion of the saints) என திருத்தூதர்களின் ஏற்கையின் 9ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “ஒரே தூய கத்தோலிக்கத் திருத்தூதுவ திருச்சபையை நம்புகின்றேன்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. திருச்சபை என்னும் சொல் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கடவுளால் அழைக்கப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட்ட மக்களைக் குறிக்கிறது. இது நம்பிக்கையினாலும் திருமுழுக்கினாலும் கடவுளின் பிள்ளைகளாகவும்,
“தூய ஆவியாரை நம்புகின்றேன்” (I believe in the Holy Spirit) என திருத்தூதர்களின் ஏற்கையின் 8ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரையும் நம்புகின்றேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக வழிபாடும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. தூய ஆவியாரை நம்புவது என்பது தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகின்ற மூவொரு கடவுளின் மூன்றாம் ஆள்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை
“வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து வருவார்” (From heaven Jesus Christ will come to judge the living and the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 7ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும் திகழ்கின்ற மாட்சிப்பெற்ற கிறிஸ்து, மறைபொருளாக
“இயேசு கிறிஸ்து விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்” (Jesus Christ ascended into heaven, and is seated at the right hand of God the Father almighty) என திருத்தூதர்களின் ஏற்கையின் 6ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இயேசு கிறிஸ்து விண்ணகத்துக்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மீண்டும் அவர் இவ்வுலக வாழ்வுக்கு வருவதன்று.
“இயேசு கிறிஸ்து பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்” (Jesus Christ descended into hell; on the third day he rose again from the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 5ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “மறைநூல்களின்படி, இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. ‘பாதாளம்’ என்பது பாவத்திற்கு தண்டனை பெற்றவர்களுக்கான ‘நரகம்’ என்பதிலிருந்து வேறுபட்டது. இது கிறிஸ்துவுக்கு முன்னர் இறந்து
“இயேசு கிறிஸ்து பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்” (Jesus Christ suffered under Pontius Pilate, was crucified, died, and was buried) என திருத்தூதர்களின் ஏற்கையின் 4ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இயேசு கிறிஸ்து நமக்காக பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில், சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. கடவுள் தமது மகனின் வருகைக்காகப் பல நூற்றாண்டுகளாக உலகைத் தயாரித்தார்.
“இயேசு கிறிஸ்து தூய ஆவியாரால் கருவாகி கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்” (Jesus Christ was conceived by the Holy Spirit and born of the virgin Mary) என திருத்தூதர்களின் ஏற்கையின் 3ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “மனிதரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியாரால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது. மனிதரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின்