திருச்சபை
திருச்சபை
இறைமகன்
இறைமகன்
மறைநூல்
மறைநூல்
மரியன்னை
மரியன்னை
கத்தோலிக்கம்
கத்தோலிக்கம்
இந்தியா
இந்தியா
புனிதர்கள்
புனிதர்கள்
இறையியல்
இறையியல்
திருத்தந்தையர்
திருத்தந்தையர்
விவிலியம் அறிவோம்
  • ஆண்டவர் வாக்களித்த காலத்தில், சாரா கருத்தாங்கி முதிர்ந்த வயதில் ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அப்பொழுது சாரா, “கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார். இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்” என்று சொன்னார். சாரா தமக்குப் பெற்றுக் கொடுத்த மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று ஆபிரகாம் பெயரிட்டார். இஸ்மயேலையும் ஆகாரையும் வெறுப்புடன் நோக்கிய சாரா, “பணிப்பெண்ணின் மகன் எனது மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இல்லாதவாறு அவர்களை இங்கிருந்து துரத்திவிடும்” என்று ஆபிரகாமிடம் கூறினார். இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த...
  • சாரா இறந்த பிறகு ஆபிரகாம் தமது உடைமைகளின் பொறுப்பாளரை அழைத்து, ஈசாக்கிற்கு பெண் பார்க்க தமது உறவினரிடம் அனுப்பி வைத்தார். மெசபத்தோமியாவின் நாகோர் பகுதிக்கு ஒட்டகங்களுடன் சென்ற அவர், ஆபிரகாமின் சகோதரர் மகன் பெத்துவேலின் மகளான ரெபேக்காவை சந்தித்தார். அவருக்கு நகைகளும் ஆடைகளும் பரிசளித்து, அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் ஆபிரகாம் இருந்த கானான் நாடு நோக்கி அழைத்து சென்றார். நெகேபு பகுதியில் தங்கியிருந்த ஈசாக்கு, ஒட்டகங்களை நெருங்கி ரெபேக்காவை பார்த்தார். அவர் ஈசாக்கை பார்த்ததும், முக்காட்டால் தம்...
  • முதிர்ந்த வயதை அடைந்த ஈசாக்கு, மூத்த மகன் ஏசாவுக்கு ஆசி வழங்க விரும்பினார். அவரிடம் வேட்டையாடி உணவு சமைத்து வருமாறு கூறி, ஆசி வழங்க காத்திருந்தார். அவருக்கு கண் தெரியாததை சாதகமாக பயன்படுத்தி, யாக்கோபுக்கு ரெபேக்கா உதவினார். தாய் சமைத்த உணவை வழங்கி, யாக்கோபு ஈசாக்கிடம் ஆசியைப் பெற்றுக் கொண்டார். இதனால் ஏமாந்து போன ஏசா, யாக்கோபை கொன்று விடும் அளவுக்கு சீற்றம் அடைந்தார். இதையறிந்த ரெபேக்கா, காரானில் இருந்த தம் சகோதரர் லாபானிடம் யாக்கோபை அனுப்பி...
  • யாக்கோபுக்கு லேயா வழியாக ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், ராகேலின் பணிப்பெண் பிலகா மூலம் தாண், நப்தலி, லேயாவின் பணிப்பெண் சில்பா மூலம் காத்து, ஆசேர், ராகேல் வழியாக யோசேப்பு, பென்யமின் என பன்னிரு புதல்வர்கள் பிறந்தனர். யாக்கோபின் மந்தையை மேய்த்து வந்த அவர்களில் பலர் நல்லவர்களாக இருக்கவில்லை. பிலகா, சில்பா ஆகியோரின் புதல்வர்கள் பல்வேறு தீச்செயல்களை செய்து வந்தனர். ராகேலுக்கு பிறந்த முதல் மகன் யோசேப்பை, யாக்கோபு அதிகமாக நேசித்தார். அவருக்கு வேலைப்பாடு...
  • யோசேப்பை வாங்கிச் சென்றவர்கள் எகிப்தை அடைந்து, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனான போத்திபாரிடம் அவரை விற்றனர். அவரது செயல்களை ஆண்டவர் துலங்கச் செய்ததால் அவரைத் தன் வீட்டின் மேலாளராக நியமித்த போத்திபார், அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான். யோசேப்பு மீது ஆசை கொண்ட போத்திபாரின் மனைவி, அவரை சிற்றின்பத்துக்கு அழைத்தார். அவர் உடன்படாத காரணத்தால், பொய்ப்பழி சுமத்தி அவரை சிறையில் அடைக்கச் செய்தாள். அங்கிருந்த அரச கைதிகள் இருவரின் கனவுகளுக்கு யோசேப்பு விளக்கம் அளித்தார். அவர் கூறியபடியே, அப்பம்...
  • யோசேப்பும் அவருடைய எல்லா சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்து போயினர். இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர். இதனால், அந்நாடே அவர்களால் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில், யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் தன் குடிமக்களை நோக்கி, “இஸ்ரயேல் மக்களினம் நம்மை விட ஆள்பலம் வாய்ந்ததாய் உள்ளது. அவர்கள் எண்ணிக்கையில் பெருகாதவாறு தந்திரமாய் செயல்படுவோம்” என்றான். இஸ்ரயேலரை ஒடுக்க அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்....
  • இளைஞராக வளர்ந்த மோசே, தம் இனத்தவர் அனுபவித்த கொடுமைகளைக் கண்டார். தம் இனத்தைச் சேர்ந்த எபிரேயன் ஒருவனை அடித்த எகிப்தியனை, அவர் அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார். இச்செய்தியை கேள்வியுற்ற பார்வோன், மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே, மோசே எகிப்தில் இருந்து தப்பியோடி, மிதியான் நாட்டை அடைந்தார். அங்கு இடையர்களால் விரட்டப்பட்ட மிதியான் அர்ச்சகருடைய புதல்வியருக்கு பாதுகாப்பளித்த மோசே, அவர்களது ஆட்டு மந்தைக்கு தண்ணீர் காட்டினார். இது குறித்து கேள்வியுற்ற அர்ச்சகர் இத்திரோ, மோசேயை வரவழைத்து...