பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு
பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு
பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு
பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு
பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு
பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு
திருவுடல் திருரத்தப் பெருவிழா
திருவுடல் திருரத்தப் பெருவிழா
மூவொரு கடவுள் பெருவிழா
மூவொரு கடவுள் பெருவிழா
தூய ஆவியாரின் வருகை பெருவிழா
தூய ஆவியாரின் வருகை பெருவிழா
திருப்பலி முன்னுரை: விண்ணகத்துக்குரியவர்களே, ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனிடம் செல்கிறார். தூய ஆவியாரின் துணையோடு உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றி, கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியைப் பிறருக்கு அறிவிக்க இயேசு நம்மை அழைக்கிறார். ஆண்டவருக்கு சான்று
Read More
திருப்பலி முன்னுரை: அமைதிக்குரியவர்களே, இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அமைதியைக் கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் மீது அன்பு கொண்டு, அவர் சொல்வதைக் கடைப்பிடித்து வாழவும், அதன் வழியாக இறைத்தந்தையின் அன்பைப் பெறவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் மீது கொள்ளும் அன்பின் ஆற்றலால் வழங்கப்படும் அமைதியை சுவைக்க இயேசு நம்மை அழைக்கிறார். தூய ஆவியாரின் வழிகாட்டுதலால், உலகம் தரும் அமைதிக்கு மேலாக கிறிஸ்து அருளும்
Read More
திருப்பலி முன்னுரை: அன்புக்குரியோரே, நம் அன்பராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நமது ஆண்டவர் இயேசு நம்மை அன்பு செய்தது போன்று, நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் வாழ்வு கடவுளை மாட்சிப்படுத்தியது போல, நமது அன்பு வாழ்வின் வழியாக கடவுளை மாட்சிப்படுத்த நாம் அழைக்கப்பட்டுளோம். இயேசுவின் அழைப்புக்கு ஏற்ப அவரது சீடர்களாய் வாழ்ந்து, கடவுள் தரும் மாட்சியைப் பெற்றுக்கொள்ள
Read More
திருப்பலி முன்னுரை: கடவுளுக்குரியவர்களே, நல்லாயராம் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறில் சிறப்பிக்கப்படும் இன்றைய திருவழிபாடு, இயேசுவைப் பின்தொடர்ந்து, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் குரலுக்கு செவிகொடுக்கும் ஆடுகளாக வாழும்போது நாம் அழிவுக்குள்ளாக மாட்டோம். நமக்காக உயிரைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நம்மை எதுவும் பிரித்துவிடாத வகையில், அவரது பாதுகாப்பில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவருக்கு உண்மையுள்ள ஆடுகளாக வாழ்ந்து, நாம் கடவுளைச் சார்ந்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்ற வரம் வேண்டி,
Read More
திருப்பலி முன்னுரை: உண்மைக்குரியவர்களே, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக ஏற்று, உண்மையான இறைமகனாகிய அவரைப் பின்தொடர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு தம் சீடர்களுக்கு திபேரியக் கடல் அருகே தோன்றியபோது, சீடர்கள் அவரில் சந்தேகம் கொள்ளவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களைப் போன்று, ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழ
Read More
திருப்பலி முன்னுரை: அன்பர்களே, இறை இரக்கத்தின் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இந்த நாளில்தான் உயிர்த்த இயேசு திருத்தூதர் தோமாவுக்குத் தமது காயங்களைக் காட்டி, தம்மீது விசுவாசம் கொள்ள அழைப்பு விடுத்தார். கடவுளின் இருப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் நம்மீது இரக்கம் கொண்டு அவரது உடனிருப்பை உணர்த்துகிறார் என்பதை புரிந்துகொள்ள இன்றைய நற்செய்தி நமக்கு உதவுகிறது. கிறிஸ்து இயேசுவின்
Read More
திருப்பலி முன்னுரை: உயிர்ப்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவிலியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத்தூதர்களும் மற்ற சீடர்களும்,
Read More
திருவழிபாட்டு முன்னுரை: கிறிஸ்துவுக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். கழுதைக்குட்டி மீது தொடங்கும் கிறிஸ்துவின் பயணம் சிலுவை மரத்தில் முடிவடைந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். “ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!” என்று ஆர்ப்பரித்து இயேசுவை அரசராய் வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், “அவனை சிலுவையில் அறையும்!” என்ற கூக்குரலால் அவரை மரணத்துக்கு தீர்ப்பிடுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் பாடுகளின் பயணத்தில் பங்கேற்று,
Read More