இணைத் திருமுறை
இணைத் திருமுறை
ஞான நூல்கள்
ஞான நூல்கள்
அகியா
அகியா
அகிமெலக்கு
அகிமெலக்கு
அகிமான்
அகிமான்
அகிமாசு
அகிமாசு
அகிக்காம் (Ahikam) என்ற பெயருக்கு ‘என் சகோதரன் எழுந்துவிட்டான்’ என்பது பொருள். யூதா அரசர் யோசியாவிடம் பணியாற்றிய அகிக்காம், எழுத்தன் சாப்பானின் மகன். இவர் இறைவாக்கினர் எரேமியாவைக் காப்பாற்றியவர். 2 அரசர்கள் 22:12, எரேமியா 26:24 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.
Read More
அகஸ்வேர் (Ahasuerus) என்ற பெயருக்கு ‘இளவரசர்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். பாரசீகத்தின் முதல் அரசரான அகஸ்வேர், யூதப் பெண்ணான எஸ்தரை திருமணம் செய்து அரசி ஆக்கியவர். எஸ்தர் 1:1, 2:16 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். மேதிய இனத்தைச் சேர்ந்தவரான அகஸ்வேர், தாயுவின் தந்தை. தானியேல் 9:1 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம்.
Read More
அகசியா (Ahaziah) என்ற பெயருக்கு ‘ஆண்டவர் பற்றிக்கொண்டார்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். ஆகாபு – ஈசபேல் ஆகியோரின் மகனான அகசியா, சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரயேலின் அரசர். 1 அரசர்கள் 22:52, 2 அரசர்கள் 1:2, 2 குறிப்பேடு 20:35 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். யோராமின் மகனான அகசியா, எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதாவின் அரசர். ‘யோவகாசு’ (2 குறிப்பேடு 21:17)
Read More
அக்சா (Achsah) என்ற பெயருக்கு ‘சிலம்பு’ என்பது பொருள். காலேபின் மகளான அக்சா, கிரியத்து சேபேரைக் கைப்பற்றிய கெனாசின் மகனான ஒத்னியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவர். யோசுவா 15:16, நீதித்தலைவர்கள் 1:12, 1 குறிப்பேடு 2:49 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.
Read More
அக்கூபு (Akkub) என்ற பெயருக்கு ‘வஞ்சகமாகப் பின்தொடர்கிற’ என்பது பொருள். இப்பெயருடைய மூன்று நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். எக்கோனியாவின் வழிமரபில் தோன்றிய அக்கூபு தாவீதின் வழித்தோன்றல்களில் ஒருவர். 1 குறிப்பேடு 3:24 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம். எருசலேம் கோவிலின் வாயில் காப்போரின் வழிமரபினரான அக்கூபு, செருபாபேல் காலத்தில் எருசலேம் திரும்பியவர்களுள் ஒருவர். 1 குறிப்பேடு 9:17, எஸ்ரா 2:42, நெகேமியா 11:19 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக்
Read More
அக்கிலா (Aquila) என்ற பெயருக்கு ‘கழுகு’ என்பது பொருள். போந்து பகுதியைச் சேர்ந்த அக்கிலா, திருத்தூதர் பவுலின் தோழர். திருத்தூதர் பணிகள் 18:2, ரோமையர் 16:3, 1 கொரிந்தியர் 16:19, 2 திமொத்தேயு 4:19 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். இவரது மனைவி பெயர் பிரிஸ்கில்லா (திருத்தூதர் பணிகள் 18:18).
Read More
இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இறைவாக்கினர்களின் வார்த்தைகள், பல நிலைகளில் எழுத்து வடிவம் பெற்றன. சாமுவேல், காது, நாத்தான், அகியா, செமாயா, ஏகூ, எலியா, மீக்காயா, எலிசா, குல்தா, ஆகாபு, எதுத்தூன், இத்தோ, அசரியா, அனானி, யாகசியேல், எலியேசர், உரியா ஆகியோர் இறைவாக்கு உரைத்தது பற்றிய பதிவுகள், பழைய ஏற்பாட்டின் வரலாற்று நூல்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே, அவர்கள் ‘நூல்பெறாத இறைவாக்கினர்’ எனப்படுகின்றனர். ‘நூல்பெற்ற இறைவாக்கினர்’களை, அவர்கள் வழங்கிய
Read More
திருத்தூதர் தோமா கேரளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், அவரோடு இணைந்து செயல்பட திருத்தூதர் பர்த்தலமேயு இந்தியா வந்தார். அவர் கேரளாவுக்கு பதிலாக மராட்டியக் கடற்கரையில் இறங்கி, மும்பையின் கல்யாண் பகுதியை அடைந்தார். இருப்பினும் அங்கு வாழ்ந்த மக்களிடையே சிறிது காலம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த அவர், சிலருக்கு திருமுழுக்கு கொடுத்தார். பின்னர் அர்மேனியா செல்ல விரும்பி, தமது சீடர்கள் இருவரையும் திருத்தூதர் மத்தேயு அரமேயத்தில் எழுதிய நற்செய்தி
Read More