Contribute

அன்பானவர்களே,
அனைவருக்கும் வணக்கம். கிறிஸ்தவம்.in என்ற இந்த வலைதளம் கிறிஸ்தவ சமயம் குறித்த அனைத்து தகவல்களும் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. வலைதளத்தை மேம்படுத்த உங்களது உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. நீங்கள் இரு விதங்களில் எங்களுக்கு உதவலாம்.

1. கட்டுரை உதவி:
நீங்கள் கிறிஸ்தவ இறையியல், வரலாறு, விவிலியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும் தெளிவும் கொண்டவர்களாக இருந்தால், நாங்கள் குறிப்பிடும் தலைப்புகளில் கட்டுரைகள் தயாரித்து எங்களுக்கு வழங்கலாம். எங்களது இந்த முயற்சியில் ஒத்துழைக்க குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

2. நிதி உதவி:
காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ சமயம் குறித்த சரியான புரிதலை வழங்குவதே இந்த வலைதளத்தின் நோக்கம். இதன் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு உங்கள் நிதி உதவி தேவைப்படுகிறது. பணமும் மனமும் கொண்டவர்கள் இந்த நற்செய்தி அறிவிப்பு பணியில் உங்களால் இயன்ற உதவி செய்ய அழைக்கிறோம்.

மேற்கண்ட விதங்களில் எங்களுக்கு உதவ விரும்புவோர், உங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களை chiristhavam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நாங்கள் தொடர்பு கொண்டு, உங்கள் உதவியைப் பெற்றுக்கொள்வோம். நன்றி!

எதிர்பார்ப்புடன்,
D. Agnel Jose Karol
Administrator, chiristhavam.in