மீட்பை எதிர்பார்த்திருந்த உலக மக்களிடையே மனிதராகத் தோன்ற கடவுள் விரும்பினார். அதற்காக, குலமுதுவராகிய ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களினத்தை அவர் தயார் செய்தார். ஆபிரகாமை அழைத்து அவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட கடவுள், அவரது முதிர்ந்த வயதில் பிறந்த மகனான ஈசாக்கை பலியாகத் தருமாறு கேட்டார். அவ்வாறு செய்ய ஆபிரகாம் தயங்காததைக் கண்ட கடவுள் அவரைத் தடுத்து, “உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்
“‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” (மத்தேயு 5:38-39) “‘உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச்
யூதர்களின் வழக்கப்படி முப்பது வயதை எட்டிய ஆண் திருமணம் செய்வது கட்டாயம் என்பதால், இயேசு கிறிஸ்து திருமணம் செய்திருக்க வேண்டும் என சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறானது என்பதற்கு இயேசுவின் காலத்தில், சாக்கடலை ஒட்டிய கும்ரான் பகுதியில் வாழ்ந்த எஸ்ஸேனியர்களே சான்றாக உள்ளனர். மெசியாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த எஸ்ஸேனிய பிரிவைச் சேர்ந்த ஆண்கள், திருமண உறவை விலக்கித் துறவற வாழ்வில் ஈடுபட்டிருந்தனர். இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாக விளங்கிய
இயேசு ‘இறைமகன்’ என்பதற்கு தந்தையாம் கடவுள் சான்று பகர்ந்த பிறகு, அலகை அவரை சோதிக்கிறது. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அலகையின் பேச்சைக் கேட்டு, கல்லை அப்பமாக மாற்றி தாம் இறைமகன் என்று இயேசு நிரூபித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால்
“நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்” (2கொரிந்தியர் 5:21) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், இயேசுவில் நிறைவேறிய இறைத்தந்தையின் திட்டத்தை வெளிப்படுத்துகின்றன. தூயவரான இயேசு கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகத் திருமுழுக்கு பெறுவது தந்தையாம் கடவுளின் திட்டமாக இருந்தது. ஆகவேதான், “கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதே முறை” (மத்தேயு 3:15) என்று யோவானிடம் இயேசு பதிலளிக்கிறார். இயேசு கிறிஸ்து
இயேசு கிறிஸ்துவின் வாழ்வு குறித்து நற்செய்திகள் குறிப்பிடாத இடைவெளியை, பலரும் தங்களது கற்பனைக்கு ஏற்ப நிரப்பிக் கொள்கின்றனர். இயேசு வெளிநாட்டுக்குச் சென்று கிரேக்க ஞானத்தையோ, புத்த மதத்தின் நெறிகளையோ கற்றிருக்கலாம் என யூகத்தின் அடிப்படையிலான கருத்தை முன்வைக்கின்றனர். இந்த கருத்து தவறானது என்பதை லூக்கா நற்செய்தியாளர் தமது நூலில் தெளிவாக பதிவு செய்துள்ளார். ‘அவர் பெற்றோருடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும்
யூத வழக்கத்தின்படி, ஒருவரது நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஆதாரமாக விவிலியத்திலும் நம்மால் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், “நாம் சகோதரர்” (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, “நீ என் சகோதரன்” (தொடக்கநூல் 29:15) என அழைத்ததாக வாசிக்கிறோம். விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், ‘சகோதரர்’ என்று வரும்
பிளாவியு யோசேப்பு (கி.பி.37-97) என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் தாம் எழுதிய ‘யூத மரபு வரலாறு’ என்னும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரது நடத்தை நல்லதாக இருந்தது; அவர் குற்றமற்றவராக இருந்தார். யூதர்களி லும், மற்ற நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் அவரது சீடர்களானார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு, பிலாத்து அவருக்கு
குலமுதுவர் ஆபிரகாம் மற்றும் அரசர் தாவீதின் வழிமரபில் தோன்றியவரே இயேசு கிறிஸ்து என்பதை நற்செய்தியாளர்கள் இருவருமே உறுதி செய்கின்றனர். ஆபிரகாம் தொடங்கி இயேசு வரை 42 தலைமுறை பட்டியலை வழங்கும் நற்செய்தியாளர் மத்தேயு, அவற்றை மூன்று 14 தலைமுறைகளாக பிரித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், தாவீது என்ற பெயருக்கு உரிய எண் மதிப்பு 14 என்பதே. ‘ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமாகிய இயேசு கிறிஸ்து’ என்று தமது நற்செய்தி நூலைத்
அர்க்கெலாவின் தந்தையான பெரிய ஏரோது யூதேயாவில் ஆட்சி செய்த வேளையில் இயேசு பிறந்தார் என்று மத்தேயு நற்செய்தியில் (2:1) காண்கிறோம். யூதர்களின் அரசராக பிறந்த குழந்தையைக் கொலை செய்ய ஏரோது வீரர்களை அனுப்பியதாகவும், அப்பொழுது இயேசுவுக்கு ஏறக்குறைய இரண்டு வயது என்றும் மத்தேயு குறிப்பிடுகிறார். யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில் இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்றே லூக்கா நற்செய்தி நூலிலும் (1:5) எழுதப்பட்டுள்ளது. ஆகவே பெரிய ஏரோது