கடவுள் தம் முதற்பேறான மகனை உலகிற்கு அனுப்ப எண்ணியபோது, “தூதர்கள் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார் (எபிரேயர் 1:4-6). இதை எதிர்த்து, லூசிபர் தலைமையிலான வானதூதர்கள் கிளர்ச்சி செய்தனர். பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் லூசிபர் கூட்டத்துடன் போர் தொடுத்தார்கள்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட லூசிபரும் அவன் தூதர்களும் தோல்வியுற்றனர். விண்ணகத்தில் அவர்களுக்கு இடமே இல்லாது போயிற்று. (திருவெளிப்பாடு 12:7-8) கடவுளுக்கும் அவரது திட்டத்திற்கும் பணி
சுடரொளி வீசுவோர் (பத்திசுவாலகர்), புகழ்ந்தேற்றுவோர் (நாதகிருத்தியர்), அரியணையில் அமர்வோர் (பத்திராசனர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் முதல் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் கடவுளைப் புகழ்ந்து போற்றி வணங்குகிறவர்களாக உள்ளனர். (1) சுடரொளி வீசுவோர் அல்லது சேராபீன்கள் (Seraphim) என்னும் வானதூதர்கள் கடவுள் மீதான அன்பாலும், ஆர்வத்தினாலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆண்டவரின் அரியணையை சூழ்ந்து நிற்கின்றனர்; சேராபீன்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருக்கின்றன;
இறை ஏவுதலால் எழுதப்பட்ட தொடக்க நூலில் காணப்படும் முதல் பெற்றோர் குறித்த கதை, உலக மீட்பரின் தாய் பற்றி பேசுகிறது. ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். (தொடக்க நூல் 3:14,15) அலகையாகிய பாம்பின் தலையைக் காயப்படுத்தும் வித்து இறைமகன் இயேசுவே என்பதால், அந்த பெண் மரியாவே