சிலுவை அடையாளம் (Sign of the Cross) என்பது, கிறிஸ்தவர்கள் மூவொரு கடவுள் (தந்தை, மகன், தூய ஆவியார்) பெயரால் தங்களையே புனிதம் செய்யும் செபம் ஆகும். எந்த ஒரு செபத்தையும் செயலையும் தொடங்கும் முன்னும், முடிக்கும் போதும் இந்த செபத்தை சொல்வது வழக்கம்.
செபம்
வரைமுறை
முதலில் கைகளைக் குவித்த நிலையில் இந்த செபத்தை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து ‘தந்தை’ என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி ‘மகன்’ என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து ‘தூய’ என்றும், பின்னர் வலது தோளுக்கு கொண்டு சென்று ‘ஆவியின்’ என்றும், அதன்பின் கைகளைக் குவித்து ‘பெயராலே’ என்றும், இறுதியாக தலை வணங்கி ‘ஆமென்’ என்றும் கூற வேண்டும்.
விளக்கம்
தந்தையாம் கடவுள், தம் ஒரே அன்பு மகன் இயேசு கிறிஸ்துவை, தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகச் செய்து, மனிதரை மீட்க உலகிற்கு அனுப்பினார் என்பதை இந்த சிலுவை அடையாள செபம் நினைவூட்டுகிறது.

சிலுவை அடையாளம்