கர்மேல் துறவி ஒருவருக்கு அன்னை மரியா காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில் இந்த திருநாள் ஜூலை 16ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் இது ஒரு விருப்ப நினைவாக இடம் பெற்றுள்ளது.
பின்னணி
இறைவாக்கினர் எலியா வாழ்ந்த கர்மேல் மலைப் பகுதியில், சிலுவைப் போர் நடைபெற்ற காலத்தில் துறவிகள் சிலர் தஞ்சமடைந்தனர். பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த கர்மேல் துறவிகள் அன்னை மரியாவின் பாதுகாப்புக்காக மன்றாடினர். இந்நிலையில், அவர்களது சபைத் தலைவரான புனித சைமன் ஸ்டோக் 1251 ஜூலை 16ந்தேதி அன்னை மரியாவின் காட்சியைக் கண்டார். ‘பழுப்பு உத்தரியம்’ என்று அழைக்கப்படும் ‘கர்மேல்’ உத்தரியத்தை அவருக்கு அறிமுகம் செய்த அன்னை, அதை அணிவோர் பாதுகாப்பு பெறுவார்கள் என்று வாக்களித்தார்.
கர்மேல் அன்னை
நாள்:
ஜூலை 16
வகை:
விருப்ப நினைவு