அகசியா (Ahaziah) என்ற பெயருக்கு ‘ஆண்டவர் பற்றிக்கொண்டார்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். ஆகாபு – ஈசபேல் ஆகியோரின் மகனான அகசியா, சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரயேலின் அரசர். 1 அரசர்கள் 22:52, 2 அரசர்கள் 1:2, 2 குறிப்பேடு 20:35 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். யோராமின் மகனான அகசியா, எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதாவின் அரசர். ‘யோவகாசு’ (2 குறிப்பேடு 21:17)
Read More
அக்சா (Achsah) என்ற பெயருக்கு ‘சிலம்பு’ என்பது பொருள். காலேபின் மகளான அக்சா, கிரியத்து சேபேரைக் கைப்பற்றிய கெனாசின் மகனான ஒத்னியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவர். யோசுவா 15:16, நீதித்தலைவர்கள் 1:12, 1 குறிப்பேடு 2:49 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.
Read More
அக்கூபு (Akkub) என்ற பெயருக்கு ‘வஞ்சகமாகப் பின்தொடர்கிற’ என்பது பொருள். இப்பெயருடைய மூன்று நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். எக்கோனியாவின் வழிமரபில் தோன்றிய அக்கூபு தாவீதின் வழித்தோன்றல்களில் ஒருவர். 1 குறிப்பேடு 3:24 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம். எருசலேம் கோவிலின் வாயில் காப்போரின் வழிமரபினரான அக்கூபு, செருபாபேல் காலத்தில் எருசலேம் திரும்பியவர்களுள் ஒருவர். 1 குறிப்பேடு 9:17, எஸ்ரா 2:42, நெகேமியா 11:19 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக்
Read More
அக்கிலா (Aquila) என்ற பெயருக்கு ‘கழுகு’ என்பது பொருள். போந்து பகுதியைச் சேர்ந்த அக்கிலா, திருத்தூதர் பவுலின் தோழர். திருத்தூதர் பணிகள் 18:2, ரோமையர் 16:3, 1 கொரிந்தியர் 16:19, 2 திமொத்தேயு 4:19 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். இவரது மனைவி பெயர் பிரிஸ்கில்லா (திருத்தூதர் பணிகள் 18:18).
Read More
இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இறைவாக்கினர்களின் வார்த்தைகள், பல நிலைகளில் எழுத்து வடிவம் பெற்றன. சாமுவேல், காது, நாத்தான், அகியா, செமாயா, ஏகூ, எலியா, மீக்காயா, எலிசா, குல்தா, ஆகாபு, எதுத்தூன், இத்தோ, அசரியா, அனானி, யாகசியேல், எலியேசர், உரியா ஆகியோர் இறைவாக்கு உரைத்தது பற்றிய பதிவுகள், பழைய ஏற்பாட்டின் வரலாற்று நூல்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே, அவர்கள் ‘நூல்பெறாத இறைவாக்கினர்’ எனப்படுகின்றனர். ‘நூல்பெற்ற இறைவாக்கினர்’களை, அவர்கள் வழங்கிய
Read More
திருத்தூதர் தோமா கேரளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், அவரோடு இணைந்து செயல்பட திருத்தூதர் பர்த்தலமேயு இந்தியா வந்தார். அவர் கேரளாவுக்கு பதிலாக மராட்டியக் கடற்கரையில் இறங்கி, மும்பையின் கல்யாண் பகுதியை அடைந்தார். இருப்பினும் அங்கு வாழ்ந்த மக்களிடையே சிறிது காலம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த அவர், சிலருக்கு திருமுழுக்கு கொடுத்தார். பின்னர் அர்மேனியா செல்ல விரும்பி, தமது சீடர்கள் இருவரையும் திருத்தூதர் மத்தேயு அரமேயத்தில் எழுதிய நற்செய்தி
Read More
மன்றாடுவோமாக: இறைவா, உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பால் உலகம் களிகூர அருள் புரிந்தீரே, அவரது திருத்தாயாகிய கன்னி மரியாவின் துணையால் நாங்கள் என்றும் நிலைவாழ்வின் பேரின்பத்தைப் பெற அருள் புரியுமாறு, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 9ஆம் நூற்றாண்டின் இறுதியில், விண்ணக அரசி வணக்கத்தை உள்ளடக்கிய தொடர்பாடல் தோன்றியதாக அறிகிறோம். 14ஆம் நூற்றாண்டில் தூதுரை வணக்கம் இயற்றப்பட்டு, மாலை நேரத்தில்
Read More
முதல்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, எல்லோரும்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மன்றாடுவோமாக: இறைவா, வானதூதர் அறிவித்தபடியே, உம் திருமகன் இயேசு மனிதரானதை அறிந்திருக்கிறோம். அவரது பாடுகளினாலும் சிலுவையினாலும், நாங்கள் அவரது உயிர்ப்பின் மேன்மையை அடையுமாறு, எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 1260களில் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள், அன்னை மரியாவுக்கு
Read More
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இரந்து மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள், உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே, எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்
Read More
‘இணைச்சட்ட வரலாற்று நூல்கள்‘ என்பவை, பல்வேறு மரபுகளில் தோன்றி கி.மு. 7ஆம் நூற்றாண்டில் ‘இணைச்சட்ட மரபு’ ஆசிரியர்களால் முழுமை பெற்றவை. கடவுளோடு ஏற்படுத்திய உடன்படிக்கையை மறந்ததே, வடநாடான இஸ்ரயேல் கி.மு. 722ல் அசீரியர்களால் வீழ்த்தப்பட்டு பேரழிவுக்கு ஆளானதற்கு காரணம் என்பதை நினைவூட்டவும், தென்னாடான யூதாவின் மக்களை ‘யாவே’ கடவுளுக்கு உண்மையுடன் வாழ அறிவுறுத்தவும் இந்நூல்கள் எழுதப்பட்டன. யோசுவா, நீதித்தலைவர்கள் (நியாயாதிபதிகள்), சாமுவேல் முதல் நூல் (1 சாமுவேல்), சாமுவேல் 2ஆம்
Read More