தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும் பாலஸ்தீனத்துக்கு வெளியில் தோன்றியவை என்பதால், கி.பி. 90ல் யாம்னியாவில் நடைபெற்ற சங்கத்தில் யூதர்கள் இவற்றை திருமுறை நூல்களாக ஏற்கவில்லை. ஆனால் கிரேக்க விவிலியப் பின்னணியை ஏற்று வளர்ந்த தொடக்க கிறிஸ்தவ சமூகம், அலெக்சாந்திரியத் திருமுறையில் இருந்த பழைய ஏற்பாட்டின் அனைத்து நூல்களையும் புனிதமாகக் கருதியது. கி.பி. 382ல் திருத்தந்தை முதலாம்
Read More
திருப்பாடல்கள், இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களைப் பரந்த பொருளில் மட்டுமே ஞான நூல்களாக கருத முடியும். ஏனெனில், ஞான நூல்களுக்குரிய நீதி போதனைகளை வழங்கும் பகுதிகள், திருப்பாடல்கள் நூலில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. காதல் சுவை மிகுந்த இனிமைமிகு பாடல் நூல், இளையோருக்கு இல்லற வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த உதவும் என்பதாலேயே ஞாள நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. யோபு நூல், நேர்மையாளர்கள் துன்புறுவது ஏன் என்ற கேள்விக்கு நாடக வடிவில்
Read More
அகியா (Ahijah) என்ற பெயருக்கு ‘யாவேயின் சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய பல நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். அகித்தூபின் மகனாகிய குரு அகியா, சவுல் அரசர் காலத்தில் வாழ்ந்தவர். 1 சாமுவேல் 14:3, 1 குறிப்பேடு 26:20 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம். தாவீது, சாலமோன் அரசர்களிடம் பணியாற்றிய அகியா. 1 அரசர்கள் 4:3, 1 குறிப்பேடு 11:36 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். சாலமோன் காலத்தில் வாழ்ந்த சீலோமைச்
Read More
அகிமெலக்கு (Ahimelech) என்ற பெயருக்கு ‘அரசரின் சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய மூன்று நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கு. நோபு என்ற ஊரில் வாழ்ந்த இவரே தாவீதின் பசிக்கு தூய அப்பத்தைக் கொடுத்து உதவியவர். 1 சாமுவேல் 21:1, 22:11 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். தாவீது அரசரின் காலத்தில் வாழ்ந்த குரு அபியத்தாரின் மகன் குருவான அகிமெலக்கு. 2 சாமுவேல் 8:17,
Read More
அகிமான் (Ahiman) என்ற பெயருக்கு ‘மனிதக் கொடைகளின் சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். எபிரோனில் வாழ்ந்த ஆனாக்கின் மகன் அகிமான். எண்ணிக்கை 13:22, யோசுவா 15:14 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். எருசலேம் கோவிலின் வாயில் காப்போரில் ஒருவர். 1 குறிப்பேடு 9:17 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம்.
Read More
அகிமாசு (Ahimaaz) என்ற பெயருக்கு ‘ஆற்றல்மிகு சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய மூன்று நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். இஸ்ரயேலின் முதல் அரசரான சவுலின் மனைவி அகினோவாமின் தந்தை அகிமாசு. 1 சாமுவேல் 14:50 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம். தாவீது அரசரின் காலத்தில் வாழ்ந்த தலைமைக்குரு சாதோக்கின் மகன் அகிமாசு. 1 சாமுவேல் 15:27, 18:19 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். சாலமோனின் மகள் பாஸ்மத்தின்
Read More
அகிதோபல் (Ahithophel) என்ற பெயருக்கு ‘மடமையின் சகோதரன்’ என்பது பொருள். அகிதோபல் என்பவர் தாவீதின் அறிவுக்கூர்மை மிகுந்த ஆலோசகர். 2 சாமுவேல் 15:12, 16:20 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.
Read More
அகிக்கார் (Ahikar) என்ற பெயருக்கு ‘மதிப்புமிக்க சகோதரன்’ என்பது பொருள். அனயேலின் மகனான அகிக்கார், தோபித்து பார்வையிழந்த வேளையில் அவரை கவனித்துக் கொண்டவர். தோபித்து 1:21, 14:10 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.
Read More
அகிக்காம் (Ahikam) என்ற பெயருக்கு ‘என் சகோதரன் எழுந்துவிட்டான்’ என்பது பொருள். யூதா அரசர் யோசியாவிடம் பணியாற்றிய அகிக்காம், எழுத்தன் சாப்பானின் மகன். இவர் இறைவாக்கினர் எரேமியாவைக் காப்பாற்றியவர். 2 அரசர்கள் 22:12, எரேமியா 26:24 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.
Read More
அகஸ்வேர் (Ahasuerus) என்ற பெயருக்கு ‘இளவரசர்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். பாரசீகத்தின் முதல் அரசரான அகஸ்வேர், யூதப் பெண்ணான எஸ்தரை திருமணம் செய்து அரசி ஆக்கியவர். எஸ்தர் 1:1, 2:16 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். மேதிய இனத்தைச் சேர்ந்தவரான அகஸ்வேர், தாயுவின் தந்தை. தானியேல் 9:1 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம்.
Read More